கோ.பொன்னுசாமி

கோ.பொன்னுசாமி
கோ.பொன்னுசாமி

Wednesday, April 6, 2011

ஜோலார் பேட்டை (சட்டமன்றத் தொகுதி)

ஜோலார்பேட்டை வேலூர் மாவட்டத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். நாட்டறம்பள்ளி சட்டமன்ற தொகுதி தற்போது ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தொகுதியில் உள்ள நாட்டறம்பள்ளி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரம் ஆகும். இங்கு நூற்றாண்டு விழா கொண்டாடிய ராமகிருஷ்ணமடம் உள்ளது. மடத்தின் அரிய சமூக சேவையை பாராட்டி தேச தந்தை மகாத்மா காந்தியடிகள் மடத்துக்கு நேரில் வந்து சில மணி நேரம் தங்கிய பெருமை பெற்ற இடம்.

கொத்தூர், பச்சூர் பகுதியில் விளையும் சீத்தாபழம் அளவிலும், எடையிலும் பெரியவை. சுவை மிகுந்த இந்த பழங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. நாட்டறம் பள்ளி பகுதியில் உற்பத்தியாகும் சீத்தா பழங்கள் நாட்டறம் பள்ளி பழங்கள் என்ற பெயரிலேயே மும்பை நகரில் விற்பனை செய்யப்படுவது சிறப்பு.

"ஏழைகளின் ஊட்டி'' என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை தமிழக அரசு திட்டங்களால் சுற்றுலா தலமாக வளர்ச்சி பெற்று அனைவரும் கவனத்தையும் கவர்ந்துள்ளது. 1015 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, ஏலகிரி மலை. படகு சவாரி, சிறுவர் பூங்கா, மான் பூங்கா, செயற்கை நீரூற்று ஆகியவையும், ஏலகிரி மலையின் எழில் மிகு முழுத் தோற்றத்தை ஒரே இடத்தில் இருந்து பார்க்கும் வசதி கொண்ட பரணும் சுற்றுலாவாசிகளை பெரிதும் ஈர்ப்பவை. வருடத்தின் பெரும்பாலான நாட்களில் எப்போதும் குளுகுளுவென்று இதமான சூழல் காணப்படுவது ஏலகிரி மலையின் சிறப்பம்சம்.

பீடி சுற்றுதல், ஊதுபத்தி தயாரித்தல் ஆகிய தொழிலில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதி மக்கள் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளனர். மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள் இல்லாதது பெரும் குறையாகும். பந்தாரப்பள்ளியில் உள்ள பட்டுநூல் தயாரிக்கும் ஆலையும் தெற்குபட்டு சந்தன ஆலையும் கடந்த 15 ஆண்டுகளாக மூடப்பட்டு உள்ளது. படித்த, படிக்காத இளைஞர்கள் வேலை தேடி சிங்கப்பூர், துபாய் மற்றும் அரபுநாடுகளுக்கு சென்று உழைத்து பொருள் ஈட்டி வருகிறார்கள். வெளிநாடுகள் செல்ல அரசு அங்கீகாரம் பெற்ற வேலை வாய்ப்பு மையம் தொடங்கப்பட வேண்டும். அரசு பெண்கள் கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். ஏலகிரிமலையில் அரசு சார்பில் குறைந்த வாடகையில் தங்க, விடுதிகள் கட்டப்பட வேண்டும் மூடப்பட்ட பந்தாரப்பள்ளி பட்டு நூற்பு ஆலையை திறக்க வேண்டும். கூட்டுறவு மற்றும் தனியாரிடம் வாங்கும் பாலை பதப்படுத்த பால் குளிரூட்டும் நிலையம் அமைக்க வேண்டும். புதிதாக தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வேலை வாய்ப்பு கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும் - என்பன மக்கள் கோரிக்கைகளாக உள்ளன. இக்கோரிக்கைகளை நிறைவேற்ற பா.ம.க வேட்பாளர் கோ. பொன்னுசாமி உறுதிபூண்டுள்ளார்.

வாக்காளர் எண்ணிக்கை ஜோலார்பேட்டை தொகுதியில் 1,89,460 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 95,097 பேரும், பெண்கள் 94,363 பேரும் உள்ளனர்.


தொகுதி எல்லைக‌ள்

வாணியம்பாடிவட்டம் (பகுதி) கலந்திரா, சின்னவேப்பம்பட்டு, பெத்தகல்லுபள்ளி மற்றும் கேத்தாண்டபட்டி கிராமங்கள், திருப்பத்தூர் தாலுக்கா (பகுதி) கொத்தூர் (ஆர்.எப்), கொத்தூர், சொரைகாயல்நத்தம், நயணசெருவு, தோப்புலகுண்டா, கத்தாரி, ஆத்தூர்குப்பம், குடியன்குப்பம், சின்னமோட்டூர், மண்டலவாடி, ஜோலார்பேட்டை (ஆர்.எப்), மங்கலம் (ஆர்.எப்), மங்கலம் விரிவாக்கம், ஏலகிரி மலை, நாகலத்து (ஆர்.எப்), நாகலத்து (விரிவாக்கம் ஆர்.எப்), பொன்னேரி, ஏலகிரி கிராமம், காட்டேரி, திரியாலம், வேடட்ப்பட்டு, பந்தாரப்பள்ளி, பச்சூர், பையனப்பள்ளி, வெலகல்நத்தம், நந்திபெண்டா (ஆர்.எப்), மண்டலநாயனகுண்டா, கொல்லங்குடை, பனியாண்டபள்ளி, மல்லபள்ளி, அக்ரஹாரம், அம்மனங்கோயில், மூக்கனூர், அச்சமங்கலம், தாமலேரி முத்தூர், பால்னாங்குப்பம், பாச்சல், கதிரிமங்கலம், பெரியகரம், புத்தகரம், சந்திரபுரம், விருபாட்சிபுரம், தோக்கியம், கந்திலி மற்றும் சின்னகந்திலி கிராமங்கள்,

நாட்ரம்பள்ளி (பேரூராட்சி) ஜோலார்பேட்டை (பேரூராட்சி).
ஜோலார்பேட்டை தொகுதி பா.ம.க வேட்பாளராக போட்டியிடுகிறார் கோ. பொன்னுசாமி அவருக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம்.

Sunday, April 3, 2011

பா.ம.க தேர்தல் அறிக்கை 

PMK Menifesto 2011